சாத்தான் என்னுடைய நண்பர். 1995 இலிருந்து அவர் எனக்கு நண்பர். அவர் முதலில் ஒரு சீட்டுக்கவியாக இருந்தார். திருவல்லிக்கேணி-மயிலாப்பூர் பஸ் டிக்கெட்டின் பின்பக்கத்தில் வழக்கமாக கண்டக்டர்கள் ஒருபோதும் கொடுக்கப்போகாத சில்லரையை எழுதுவார்கள். சாத்தான் கவிதை எழுதுவார்.
தகவல்நுட்பம், இலக்கியம், கலை, மொழி என பல தலைப்புகளில் எழுதிவருகிற சாத்தானின் வலைப்பதிவை உங்களில் பலருக்கும் தெரியும். satanblog.wordpress.com செல்லுங்கள்.
இப்போது அவர் ஒரு நெடுங்கதை எழுதிவருகிறார். திசை காட்டிப் பறவை என்ற தலைப்பிலான குறுமத்தியாயங்கள் நிறைந்த அவரது கதைத்தொடரை நீங்கள் படித்தேயாகவேண்டும். இதை நான் ஸ்டாராங்காக ரெமண்ட் செய்வதற்கு காரணம், எனக்குத் தெரிந்தவரை, சென்ஸிபிளான விஷயங்களை நான்சென்ஸாக எழுதும் எழுத்தாளர்கள் நிறைந்த இந்த நாட்டில், சென்ஸிபிளாக நான்சென்ஸ் ரைட்டிங்கில் கலக்கும் எழுத்தாளர் அவர். satanblog.wordpress.com