இது தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிpearlவாள நடையில் எழுதப்பட்டது. ஈ-மெயிலின் மகா மகோன்னதமான பயன்பாடுகள் குறித்து அதன் அருமை அறியாதோர்க்கு தெற்றென விளக்குவான் எழுதப்பெற்றது.
(யாப்பு – ஆசிரியர் வருத்தப்பா)
மஞ்சள்பொட்டு வைத்து மணவிழா அழைப்பிதழை
மங்கலமாய் அனுப்ப வழியற்ற இம்மின்
அஞ்சல்தொட்டு ஆவதென்கொல் எனக்கேட்டாய்.
அடச்சே! டெக்ஸ்ட் பாக்ஸ் பின்புலத்தை மஞ்சள் செய்!
நெஞ்சம் செல்வேகத்தில் மெயில் செல்லும், பெர்சனலாய்
நேருக்கு நேர் பேசல் நிகர்த்த செயல் அன்றோ – உலகக்
கஞ்சர்களின் தவத்தாலே கயிலை சிவன் அருளிய
கில்லர் ஆப் இதுவாம். செலவுக்கு ஸ்டாப் இதுவாம்.
போஸ்ட்மேன் வருகைக்காய் காத்திருந்து பூத்திருந்து
பெற்றக்கடிதத்தை பிரித்து மகிழ்வதும் ஓர்
ஹோஸ்ட் கம்ப்யூட்டர் இணைப்புள்ள ஹோம் பி.சி. இன்பாக்ஸில்
ஓப்பன் செய்வதுவும் ஒன்றா எனக் கேட்பவனே. ம்ஹூம்
வேஸ்ட் நீ! அட்டாச்மென்ட் அட்ரஸ்புக் அறியா அசடன் நீ.
விலைகேட்கா யாஹூ, ஹாட்மெயில் போல் சர்வீஸ் பல இருக்க
காஸ்ட்லி கடிதங்கள், கூரியர்கள் தேடுகிறாய். `கனி யிருப்ப
காய்கவர்ந்த’ குறளுக்கு இலக்கணமோ உன் செய்கை?
செக்ஸ்சைட்கள் புண்ணியத்தால் ஜெகவலை பிரபலமாம்.
ச்சாட் இல்லை என்றால் சைபர்கபேக்களில்லை. அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் ஏறிவரும் எமன்களாய் வைரஸ் தொல்லை -
என்பாய் நீ. எதில் இல்லை பேஜாரு? எக்ஸ்பீரியன் ஸிலாதவனே!
டெக்ஸ்ட் எடிட்டர் திணறுகிற வேகத்தில் சொற்களெல்லாம்
டெலிவரி யாகின்ற மாஜிக்கை உணராமல், புத்தம்புதிய ஈ
புக்ஸ் வந்த காலத்தில் சாணித்தாளில் படிக்கும்
புராதனன் அன்றோ நீ! பூட்ட கேஸ் ஆவாயோ?
சப்ஜெக்ட் லைனிலே தொடங்கிவிடும் சரசங்கள்
ச்சாட்கள் முடிந்துவிடும் முகவரி பரிமாற்றத்தில்
ரிப்ளை செய்பவளின் ரிஷிமூலம் அறிந்திடவும்
ரீல்விடும் ஜொள்ளனின் நதிமூலம் அறிந்திடவும்
அப்ளிகேஷன்கள் உண்டு. அபாயம் ஒன்றுமிலை -
அறுமுகனைப் பெற்றெடுத்த ஆதிசிவன் அருளாலே,
பப்ளிமாஸ் கொத்தவரை பாவையரின் தொடர்பெல்லாம்
ஈ-மெயிலை ஈன்றிட்ட ஈசனவன் வரத்தாலே.
ஸ்மைலிகளில், உணர்ச்சிகளைச் சித்திரமாய் வரைவதற்காய்
ஸ்பீடாக எதிர் வினையை தெளிவாக உரைப்பதற்காய்
அமைதியாய் உட்கார்ந்து அகிலத்தின் பிரச்னைமேல்
ஆழமாய் அகலமாய் பின்னூட்டம் புரிவதற்காய்
ஜமைக்காவின் ஜார்ஜும் ஜப்பானின் டோட்டோவும்
ஜாவா ஸ்கிரிப்ட் நடுவே ஜல்சாக்கள் செய்வதற்காய்
உமைபாகன் எம்பெருமான் சைபரமன் படைத்திட்ட
ஒப்பற்ற ஈ-மெயிலைத் திட்டாதே, தொலைச்சிடுவேன்.
குறிப்பு: வெப்உலகத்தில் இதை முதலி்ல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின்வாசனை என்ற தொடரின் ஒரு பகுதியாக எழுதினேன். சிறு திருத்தத்துடன் இப்போது இரண்டாம் படிப்பை வெளியிட்டிருக்கிறேன்.
Chella said
excellent!
சாத்தான் said
பிரமாதம்! இந்த மாதிரி எழுதுவது ரொம்ப கஷ்டம்!
zsenthil said
நன்றிங்க.
டிஜிட்டல் தமிழ் « லிங்க்கர் said
[...] ஈ-மெயில் குறுங்காவியம் [...]
விஜய் said
தங்கள் நவீன கவியை வெப்உலக பதிப்பிலும் பார்த்தேன். எழுத்துக்களின் ஆளுகை, கருத்துக்களை விட்டு விடுவதாய் உணர்கிறேன். மேலும் தொடருங்கள். இது போன்ற கவிகளால் தமிழுக்கு புதிய பார்வையும், வார்த்தைகளும் கிடைக்க நிறைய வாய்ப்புள்ளதாக உணர்கிறேன்.
zsenthil said
நன்றி. கருத்துக் கோட்டையை எழுப்புதவற்காக இதை எழுதவில்லை. இது வெறும் வார்த்தை விளையாட்டு.
SURYA said
Senthil,
Xlent dear…
Great work..
Keep it up.
Surya
Dubai
butterflysurya@gmail.com
zsenthil said
நன்றி சூர்யா.