Hello world – ஏழெட்டு தமிழ் மொழிபெயர்ப்புகள்

Hello world என்கிற இந்த கம்ப்யூட்டர் யுக பிள்ளையார் சுழியை எப்படி தமிழ்ப்படுத்தலாம் என்று பார்த்தால், ஹலோ உலகமே என்று ஒத்தைக்கு ஒத்தை மாற்றினால் தொடக்கமே கடுப்பாகிவிடுகிறது. ஆகையில், அக்கம் பக்கத்தில் சிலரைக் கேட்கலாம் என்று யோசிக்கிறேன். முன்னதாக சில அனுமானங்கள்.

  • அரசியல்வாதி அத்திப்பட்டியார் மொழிபெயர்த்தால் – பெரியோர்களே, தாய்மார்களே
  • பேட்டை பெரிசு மொளிபெயர்த்தது – இன்னா நைனா பூலாமா
  • என் தூரத்து தாத்தாவின் மொழியாக்கம் - திருச்சிற்றம்பலம் (எதற்கெடுத்தாலம் இவர் தொடக்கத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார். இவர் அரசாங்கத்தை ஏமாற்றி 65 வயது வரை ஆசிரியர் பணியில் இருந்ததால் மக்கள் இவரை திருட்டுச்சம்பளம் என்றே கூப்பிடுவார்கள்).
  • கவிஞர் ப்ரியபாரதி324 மொழிமாற்றியது – ஹே! லோகசஹியே!
  • கவியரசர் திரைப்பாடியின் மொழிபெயர்ச்சி – அன்பே, அகிலமே (அ) உலகே உன்னை அழைககிறேன்.
  • தனித்தமிழ் மொழிபெயர்ப்பாளர் தமிழ்வளவேங்கையின் மொழிபெயர்ப்பு – ஏலா, உலகம்! (ஹலோ என்ற ஆங்கிலச்சொல் ஏலா என்ற தமிழ்ச்சொல்லின்கண் பிறந்தது. உலகம் என்ற சொல் லோகம் என்ற வடமொழியின் தமிழ் வடிவமாயினும் அஃது உலை+அகம் என்ற சொற்களின் மரூஉ ஆகும். எவ்வாறு உலையினின்று பிற பொருள்கள் தோற்றுவிக்கப்படுவோ, அது போல இஃது தொல் உலையாகும். இவ்வகத்தினின்றே பிற உயிரிகள் தோன்றின என்மனார் புலவர்).
  • கணித்தமிழ் நண்பர் கரிகாலன் மொழிமாற்றம்: ஹலோ வேர்ல்டு

இப்படித்தான் நடக்கும் என்ற அனுமானத்தில் இருக்கிறேன். உங்கள் அனுமானங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருககும்?

எனது இணையாக்கம்  இது – ஹலோ, அமெரிக்கா!
 

8 Comments »

  1. பிரில்லியண்டு! எப்படி இதெல்லாம்? ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். தமிழ்ப் பிளாகோசுபியர் வழக்கிற்கூறிடின் ‘உள்குத்து’ பலமாக இருக்கிறது. உங்கள் இணையாக்கமுஞ் சூப்பரே.

  2. [...] எட்டு மொழிபெயர்ப்புகளைத் தருகிறார் செ.ச. செந்தில்நாதன். அநியாயத்துக்கு அட்டகாசமாக இருக்கிறது! [...]

  3. Ravages said

    எனக்கு முன்னே சொன்னது போல, பிரில்லியண்டு!

  4. zsenthil said

    நன்றிங்க. நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்புகளை சேருங்க. எவ்ளோ வித்தியாசம் நம்ம உலகம்னு பார்ப்போம்.

  5. bsubra said

    ஹெல்லோ, கலக்கல்

  6. நிர்மல் said

    கடுமையான சிந்தனையை கொட்டி இந்த மொழிபெயர்பை செஞ்சி இருக்கிங்க.

    ;-)

  7. என் சித்தப்பா: “என்னமோ போ … ”

    இளங்கோவடிகள்: “கணிணி போற்றுதும், கணிணி போற்றுதும்”

  8. TAMIL ELECTRONIC DATASHEETS said

    தமிழ் தரவுத்தாள் தளம்
    http://www.tamildata.co.cc
    தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a Comment