பீட்டா கவிதைகள் 5

இதை இந்த தருணத்துக்கு முன்பு எழுதியிருக்க முடியாது.
அது இன்னொரு காலத்தின் தொடர்ச்சியாக இருந்தது.
இருள்கற்றைக் கொளுத்திய புகைமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
நீள்நெகிழ் இரவின் பெரும்பகுதியாக இருந்தது.
புலராத பொழுதின் ஒரு பகுதியாக இருந்தது.
நிலவிலாப் பொழுதின் தறுவாயென  சதுப்பு நிலத்துக் குழிகள் வெடிக்கும் சப்தமொன்றோடு மட்டுமேன  இருந்தது.
பின் சில நிமிடங்களில் முதல் படகில் விட்டகன்றாள் அவள். அதுவரை நினைவின்றி இருந்தேன்.
அப்போது கவிதை வருவதினும் மிக சிறந்தோர் தருணங்களை அவளோடு பகிர்ந்திருந்தேன்.
தீராத கவிதையாயிருந்தாள்.

படகு கண்ணெட்டாத தூரத்தில் மறைந்த பிறகு
மற்றொரு இரவுச் சாத்தியமில்லாத போது
கவிதை பிறந்தது

Leave a Comment